
நாடு முழுவதும் நிலவி வரும் மோசமான வானிலையால் ஜனவரி 13 ஆம் திகதி முதல் 27,751 குடும்பங்களைச் சேர்ந்த 92,471 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக பேரிடர் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
இதில் கிழக்கு மாகாணம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் 17,952 குடும்பங்களைச் சேர்ந்த 56,878 பேர் கடும் மழையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
வடக்கு மாகாணத்தில் – கிளிநொச்சி, யாழ்ப்பாணம், வவுனியா மற்றும் மன்னார் ஆகிய மாவட்டங்களில் 7,970 குடும்பங்களைச் சேர்ந்த 29,299 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
வடமத்திய மாகாணத்தில் – அனுராதபுரம் மற்றும் பொலன்னறுவையில் 1,369 குடும்பங்களைச் சேர்ந்த 4,599 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடுமையான வானிலை காரணமாக 319 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.
இன்றைய (ஜனவரி 26) நிலைவரப்படி, பல மாகாணங்களில் 142 குடும்பங்களைச் சேர்ந்த 438 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய தெரிவித்துள்ளது.



