தலைப்புச் செய்திகள்

2024இல் வெளிநாட்டு வேலை வாய்ப்பு பெற்று சென்றோர் எண்ணிக்கை பற்றிய தகவல் வெளியானது

நாட்டிலிருந்து 2024ஆம் ஆண்டில் 311,000 இலங்கையர்கள் வெளிநாட்டு வேலைவாய்ப்புகளைப் பெற்றுச் சென்றதாக, வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டு, வெளிநாடுகளுக்கு வேலை வாய்ப்பு பெற்று செல்பவர்களின் எண்ணிக்கையை 340,000 ஆக உயர்த்த இலக்கு வைக்கப்பட்டுள்ளது. இது 12% வளர்ச்சியாகும்.

புதிதாக உரிமம் பெற்ற வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்வில், வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தின் தலைவர் கோசல விக்ரமசிங்க இந்த விடயங்களைக் கூறினார்.

தொழில்துறையில் மோசடி நடைமுறைகளைச் சமாளிக்கும் அதே வேளையில், ஆட்சேர்ப்பு செயல்முறைகளை மேம்படுத்தவும் பணியகம் திட்டமிட்டுள்ளது. சில உரிமம் பெற்ற நிறுவனங்களின் முறைகேடுகள் பற்றிய அறிக்கைகளை மேற்கோள் காட்டி, ஒழுங்குமுறையின் அவசியத்தை கோசல விக்ரமசிங்க வலியுறுத்தினார்.

மேலும், தொழிலாளர்களைப் பாதுகாக்க குற்றவாளிகள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

இதையும் பாருங்கள்