தலைப்புச் செய்திகள்

அர்ச்சுனா எம்.பியை கைது செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவு

யாழ்ப்பாண மாவட்ட சுயேட்சைக்குழு நாடாளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனாவை கைது செய்யுமாறு அனுராதபுரம் நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அநுராதபுரம் பகுதியில் போக்குவரத்து பொலிஸாரின் கடமைக்கு நாடாளுமன்ற உறுப்பினர் இடையூறு ஏற்படுத்தியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பிலேயே, இந்த நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மேலும் இது குறித்த விசாரணையின் முன்னேற்றம் தொடர்பான அறிக்கையினை நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

சட்ட விதிகளுக்கு முரணாக விஐபி எனும் விளக்கை வாகனத்தில் ஒளிரச் செலுத்தியமைக்காக நாடாளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனாவின் வாகனத்தை பொலிஸார் தடுத்து நிறுத்தியதாகவும், இதன்போது இரு தரப்பினருக்கும் இடையே தர்க்கம் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. 

இந்தநிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் அநுராதபுரம் பொலிஸார் இன்று (21) நீதிமன்றில் முன்வைத்த சமர்ப்பணங்களை ஆராய்ந்த நீதவான் மேற்படி உத்தரவைப் பிறப்பித்துள்ளார். 

இதற்கமைய இந்த விடயம் தொடர்பான விசாரணையின் முன்னேற்ற அறிக்கையை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 03ஆம் திகதி நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

தொடர்பான செய்தி: அர்ச்சுனா எம்பிக்கும் பொலிஸாருக்கும் இடையில் முறுகல்: VIP விளக்கால் வந்த வினை

இதையும் பாருங்கள்