தலைப்புச் செய்திகள்

வட மாகாண பாடசாலைகளின் தரம் 06, 07க்குரிய பரீட்சைக் கேள்விகளை கசிய விட்ட ஆசிரியர் பணி இடைநிறுத்தம்

வடமத்திய மாகாணத்தில் உள்ள அரச பாடசாலைகளின் தரம் 06 மற்றும் தரம் 07 ஆகியவற்றுக்கான பரீட்சையின் கேள்விகள் கசிந்தமைக்கு காரணமான ஆசிரியர் உடனடியாக பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக வடமத்திய மாகாண கல்விச் செயலாளர் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே கடந்த 06ஆம் திகதி, வட மத்திய மாகாணத்தில் தரம் 11க்கான தவணைப் பரீட்சைக்குரிய சிங்கள இலக்கிய வினாத்தாள் சமூக ஊடகங்களில் கசிந்தமையினை அடுத்து, அதிகாரிகள் உடனடி நடவடிக்கைகளை எடுத்தனர்.

இதனால், ஜனவரி 06ஆம் திகதி நடக்கவிருந்த இறுதி தவணைப் பரீட்சை ஒத்திவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.