தலைப்புச் செய்திகள்

பிறப்பு வீதம் இலங்கையில் வீழ்ச்சி

லங்கையில் வருடாந்த பிறப்பு வீதம் கணிசமானளவு வீழ்ச்சியடைந்துள்ளதாக குழந்தை நல வைத்திய ஆலோசகர் டொக்டர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.

இலங்கையின் வருடாந்த பிறப்பு வீதம் 350,000 இலிருந்து 250,000 ஆக குறைந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஆட்டிசம் மட்டுமின்றி புற்றுநோய், சர்க்கரை நோய் போன்றவற்றுக்கும் குழந்தைகள் அதிகம் பாதிப்புக்குளாவதாகவும் அவர் கூறியுள்ளார்.

எனவே தற்போதைய சூழ்நிலையில் சிறுவர்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என டொக்டர் தீபால் பெரேரா வலியுறுத்தியுள்ளார்.