
– எம்.எஸ்.எம். ஸாகிர் –
மாவடிப்பள்ளி விபத்தில் மரணமடைந்த மத்ரஸா மாணவர்களின் குடும்பங்களுக்கு வழங்கி தலா ஒரு லட்சம் ரூபாய் வீதம் வழங்கப்பட்டது. இலங்கை வக்பு சபை மற்றும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் ஆகியன இணைந்து,முஸ்லிம் தர்ம நம்பிக்கை நிதியத்திலிருந்து இந்த நிதியை வழங்கின.
அண்மையில் ஏற்பட்ட வெள்ளத்தின் போது, நிந்தவூரில் தாம் கற்கும் மதரஸாவில் இருந்து தமது ஊர் சம்மாந்துறைக்கு உழவு இயந்திரத்தில் பயணித்த போது, ஏற்பட்ட விபத்தில், வெள்ளத்தில் மூழ்வி 06 மதரஸா மாணவர்கள் உட்பட 08 பேர் உயிரிழந்தனர்.
இவ்வாறு உயிரிழந்த 06 மதரஸா மாணவர்களுக்கு முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள பணிப்பாளர் ஏ.எஸ்.எம். நவாஸின் பரிந்துரையில், இலங்கை வக்ப் சபையும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களமும் இணைந்து, முஸ்லிம் தர்ம நிதியிலிருந்து (Muslim Charities Fund) 06 லட்சம் ரூபாவை பெற்று, உயிரிழந்த மாணவர்களின் குடும்பங்களுக்கு தலா ஒரு லட்சம் வீதம் காசோலைகளாக இன்று ஞாயிற்றுக்கிழமை (08) வழங்கப்பட்டன.
இதனை முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் சம்மாந்துறை பிரதேச செயலகத்தினூடாக வழங்கியது.
இந்நிகழ்வில், முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கத்தின் பிரதிப் பணிப்பாளர் எம்.ஐ. பிர்னாஸ், சம்மாந்துறை பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் யூ.எம். அஸ்லம், முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள கணக்காளர் எஸ்.எம். எம். நிப்றாஸ், மற்றும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள கொழும்பு மாவட்டத்துக்கான அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.ஐ.எம். மஸீன் உட்பட சம்மாந்துறை பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.



