
நீதிமன்றத்தை அவமதித்ததாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திரவுக்கு எதிராக சுமத்தப்பட்டிருந்த குற்றச்சாட்டுக்களில் இருந்து, அவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.
மேற்படி குற்றச்சாட்டை முன்வைத், ஹிருணிகாவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணைகள் நிறைவடைந்ததையடுத்து, மேன்முறையீட்டு நீதிமன்றம் அவரை விடுவித்தது.
கல்கிசை நீதவான் நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்ட உத்தரவு தொடர்பாக, ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்திருந்த கருத்தை மீளப்பெறுவதாக ஹிருணிகா பிரேமச்சந்திர தனது சட்டத்தரணி ஊடாக நீதிமன்றில் உறுதியளித்ததை அடுத்து, இந்த உத்தரவு இன்று (04) பிறப்பிக்கப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் இதுபோன்ற அறிக்கைகளை வெளியிடுவதைத் தவிர்க்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளார்.
நீதியரசர் நிஸ்ஸங்க பந்துல கருணாரத்ன மற்றும் நீதியரசர் சசி மகேந்திரன் ஆகியோர் அடங்கிய மேன்முறையீட்டு நீதிமன்ற அமர்வு முன்னிலையில் இந்த மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.



