
திருடப்பட்ட சொத்துக்களை மீட்பது, நிதிக் குற்றங்களைத் தடுப்பது மற்றும் கடன் கொடுத்தோரைப் பாதுகாப்பது ஆகிய மூன்று முக்கிய சட்டமூலங்கள் – அடுத்த ஆண்டு நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என, நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயகார தெரிவித்துள்ளார்.
குற்றச் செயல்கள் தொடர்பான சட்டமூலம், மீட்பு, புனர்வாழ்வு மற்றும் வங்குரோத்துச் சட்டம் மற்றும் கணக்காய்வுச் சட்டத் திருத்தங்கள் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்று நீதி அமைச்சர் கூறியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று (04) உரையாற்றிய அவர் மேலும் தெரிவிக்கையில்; “இந்த சட்டமூலங்கள் அடுத்த காலாண்டின் ஆரம்பத்தில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது” என்றார்.
மேலும் அவர் கூறுகையில்; பணமோசடி மற்றும் போதைப்பொருள் கடத்தலை திறம்பட தடுக்கும் நோக்கில் இந்த சட்டமூலங்கள் அமைந்துள்ளதாக குறிப்பிட்டார்.
கணக்காய்வு சட்டத்தின் திருத்தங்கள் – கடன் வழங்கியோரின் நம்பிக்கையை மேம்படுத்துவதோடு, அவர்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.



