தலைப்புச் செய்திகள்

முன்னாள் எம்.பிகளுக்கு வழங்கப்பட்ட 108 வீடுகளில் 35 மாத்திரமே மீளக் கையளிப்பு

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட உத்தியோகபூர்வ வீடுகளில் 35 வீடுகள் மட்டுமே மீளக் கையளிக்கப்பட்டுள்ளதாக, நாடாளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்துள்ளார்.

மாதிவெலயில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான வீடுகளில் 108 வீடுகள் இவ்வாறு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.

கொழும்பிலிருந்து 40 கிலோமீற்றருக்குள் வீடுகள் இல்லாத நாடாளுமன்ற உறுப்பினர்கள் – தமக்கான உத்தியோகபூர்வ வீகளைப் பெற்றுக்கொள்வதற்காக விண்ணப்பிக்க முடியும்.

இந்த நிலையில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்றைய தினத்துக்குள் தத்தமது உத்தியோகபூர்வ வீடுகளைக் கையளிக்குமாறும் நாடாளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர கோரிக்கை விடுத்துள்ளார்.