
முன்னாள் அமைச்சர் ஹரின் பெனாண்டோவை பதுளை பொலிஸார் இன்று (20) கைது செய்துள்ளனர்.
நடந்து முடிந்த பொதுத் தேர்தல் காலப்பகுதியில் தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில் வாக்குமூலம் பெறுவதற்காக அவர் இன்று காலை பதுளை பொலிஸ் நிலையத்துக்கு அழைக்கப்பட்டிருந்தார்.
அந்த விடயம் தொடர்பில் வாக்குமூலம் பெறப்பட்ட பின்னர், முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ கைது செய்யப்பட்டார்.
தேர்தல் காலத்தில் தனது ஆதரவாளர்களுடன் பொது இடங்களில் ஹரின் பெனாண்டோ பிரசாரத்தில் ஈடுபட்ட போது, பொலிஸார் அவரைத் தடுத்தனர். அப்போது, தான் அணிந்திருந்த மேலாடையை பொலிஸார் முன்னிலையில் அவர் கழற்றி வீசி விட்டுச் சென்றிருந்தார்.
கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சரை, பதுளை நீதவான் நீதிமன்றில் இன்றைய தினம் ஆஜர்படுத்துவதற்கு பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.



