
சிரேஷ்ட அரச சட்டத்தரணி ஷவீந்திர விக்ரமவை சட்டமா அதிபர் திணைக்களம் பணி இடைநிறுத்தம் செய்துள்ளது.
ஷவீந்திர விக்ரம தனது மேலதிகாரிகளின் உத்தரவுகளை மீறிய குற்றச்சாட்டின் பேரில் இடைநிறுத்தப்பட்டார். ,இவர் சட்ட மா அதிபர் திணைக்களத்தில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றியவராவார்.
ஷவீந்திர விக்ரமவின் பணி இடைநீக்கத்துக்கு பொதுச் சேவைகள் ஆணைக்குழு அங்கிகாரம் வழங்கியுள்ளது.
இதேவேளை, லஞ்ச, ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழு மற்றும் கெசல்வத்தை பொலிஸ் ஆகிய இடங்களில் – பல விடயங்கள் தொடர்பாக ஷவீந்திர விக்ரம இரண்டு முறைப்பாடுகளை செய்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
ஷவீந்திர விக்ரமவிடம் – அவர் மீதான குற்றச்சாட்டுகள் தொடர்பில் சட்ட மா அதிபர் திணைக்களம் விசாரணை நடத்த உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.



