
முன்னாள் பிரதியமைச்சர் சாந்த பிரேமரத்ன – லஞ்சம் பெற்றுக்கொண்ட குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டமையை அடுத்து, மேன்முறையீட்டு நீதிமன்றம் நான்கு வருட கடூழிய சிறைத்தண்டனையை உறுதி செய்துள்ளது.
பெண்ணொருவருக்கு தொழில் வழங்குவதாகக் கூறி 2007ஆம் ஆண்டு 50 ஆயிரம் ரூபாயை லஞ்சமாகப் பெற்றுக் கொண்டார் எனும் வழக்கில், 2017ஆம் ஆண்டு சாந்த பிரேமரத்னவை, கொழும்பு மேல் நீதிமன்றம் குற்றவாளி என தீர்ப்பளித்தது.
2007 ஆம் ஆண்டு இலங்கை மின்சார சபையில்வேலை வாங்கித் தருவதாக – பெண் ஒருவரிடம் இருந்து லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் அவர் குற்றவாளி என கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
லஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு தாக்கல் செய்த வழக்கின் அடிப்படையில் அவருக்கு இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டது.
இந்தத் தீர்ப்பை எதிர்த்து மேன்முறையீட்டு நீதிமன்றில் சாந்த பிரேமரத்ன மேன்முறையீடு செய்திருந்தார். இந்தப் பின்னணியிலேயே, அவருக்கு வழங்கப்பட்ட தீர்ப்பை மேன்முறையீட்டு நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.



