தலைப்புச் செய்திகள்

வேட்பாளர் மரணம்

திர்வரும் பொதுத் தேர்தலில் ஜனநாயக தேசியக் கூட்டமைப்பு (தபால் பெட்டி) சீட்டில் யாழ்ப்பாண மாவட்டத்தில் போட்டியிடவிருந்த வேட்பாளர் ஒருவர் நேற்று (23) மாலை திடீரென உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையைச் சேர்ந்த செந்தில்வேல் தமிழியன் என்ற 34 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

வல்வெட்டித்துறை நகர சபையின் முன்னாள் உறுப்பினரான இவர் – எதிர்வரும் பொதுத் தேர்தலில் உடுப்பிட்டி தொகுதியில் போட்டியிடவிருந்தார்.

நான்கு நாட்களுக்கு முன்னர் அவர் சுகவீனமடைந்து பருத்தித்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் யாழ்ப்பாணம் ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.

இந்த நிலையில் குறித்த வேட்பாளர் மரணமடைந்துள்ளதாக தெரியவருகிறது.