தலைப்புச் செய்திகள்

செலவு அறிக்கையை சமர்ப்பிக்காத 20 ஜனாதிபதி வேட்பாளர்கள்: .இன்று இறுதி தினம்

னாதிபதித் தேர்தல் வேட்பாளர்கள் தமது செலவு அறிக்கையை சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு இன்றுடன் முடிவடைகிறது. தேர்தலில் போட்டியிட்ட 38 வேட்பாளர்களில் 18 பேர் மட்டுமே இதுவரை தேர்தல் செலவு அறிக்கையை சமர்ப்பித்துள்ளனர்.

தேர்தல் செலவுகள் ஒழுங்குமுறை சட்டத்தின்படி, தேர்தல் முடிந்த 21 நாட்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

தேர்தல் ஆணைக்குழு ஒக்டோபர் 13, 2024 பிற்பகல் 3:00 மணிக்கு இறுதிக் காலக்கெடுவை நிர்ணயித்துள்ளது.

இந்தக் காலக்கெடுவுக்குள் சமர்ப்பிக்கத் தவறும் வேட்பாளர்களுக்கு,1981 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் சட்டத்தின் கீழ் 01 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படலாம்.