
ஐக்கிய மக்கள் சக்தியின் பெண்கள் அமைப்பான- ஐக்கிய மகளிர் சக்தியின் தேசிய அமைப்பாளர் பதவியை ரஜிநாமா செய்வதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர தெரிவித்துள்ளார்.
பதவியில் இருந்து விலகிய போதிலும், கட்சியின் செயற்பாட்டு உறுப்பினராகத் தொடர்ந்தும் இருப்பதாகவும், 2024ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் போட்டியிட தீர்மானித்துள்ளதாகவும் அவர் கூறினார்.
ஜனாதிபதி தேர்தல் பிரசாரத்தின் போது, அமைப்பாளர்கள் தமது கடமைகளை நிறைவேற்றவில்லை என கட்சியில் இருந்து சுமத்தப்பட்ட குற்றச்சாட்டினால் ஏற்பட்ட விரக்தியே தனது ராஜினாமாவுக்கு காரணம் எனவும் ஹிருணிக்கா பிரேமச்சந்திர சுட்டிக்காட்டியுள்ளார்.
தனது பதவியை ராஜினாமா செய்வதற்கான முடிவில் இந்த குற்றச்சாட்டுகள் முக்கிய பங்கு வகித்ததாக அவர் குறிப்பிட்டார்.
இருந்தபோதிலும், தனது அரசியல் எதிர்காலம் குறித்து நம்பிக்கை வெளியிட்டுள்ள ஹிருணிகா பிரேமச்சந்திர, எதிர்வரும் தேர்தலின் போது – மக்கள் தன்னை மீண்டும் நாடாளுமன்றத்துக்கு தெரிவு செய்வார்கள் எனவும் நம்பிக்கை தெரிவித்தார்.



