தலைப்புச் செய்திகள்

முன்னாள் அமைச்சர்களுக்கு வழங்கப்பட்ட 41 வீடுகளில் 14 மட்டுமே மீளளிக்கப்பட்டுள்ளன: ஏனையோருக்கு எதிராக நடவடிக்கை

முன்னாள் அமைச்சர்களுக்கு வழங்கப்பட்ட அரசுக்குச் சொந்தமான உத்தியோகபூர்வ இல்லங்களை தொடர்ந்தும் வைத்திருப்போருக்கு எதிராக, சட்ட நடவடிக்கை எடுக்க பொது நிர்வாகம் மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு தீர்மானித்துள்ளது.

முன்னாள் அமை்சசர்களுக்கு வழங்கப்பட்ட 41 உத்தியோகபூர்வ இல்லங்களில் 14 வீடுகள் மட்டுமே திருப்பி வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சின் அதிகாரி ஒருவர் கூறியதாக தெரிவிக்கப்படுகிறது.

முன்னாள் அரசாங்கத்தின் அமைச்சர்களுக்கு கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் உள்ள 41 வீடுகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அமைச்சின் அதிகாரி கூறியுள்ளார்.

நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தலுக்குப் பின்னர், உத்தியோகபூர்வ இல்லங்களைத் திரும்பப் பெறுவதற்கான அறிவிப்பை பொது நிர்வாகம் மற்றும் உள்துறை அமைச்சு வெளியிட்டது.

இருந்தபோதிலும் பொது நிர்வாகம் மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சின் நடவடிக்கையின் மூலம் இதுவரை 14 வீடுகள் மட்டுமே திருப்பி வழங்கப்பட்டுள்ளன.