
பொதுத் தேர்தலில் போட்டியிடும் பொருட்டு, நாடு முழுவதும் நேற்று (08) மாலை 04.15 வரை 246 சுயேட்சைக் குழுக்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
திகாமடுல்ல (அம்பாறை) மாவட்டத்திலேயே அதிகளவு (37) சுயேட்சைக் குழுக்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளன.
காலி (02) மற்றும் பொலன்னறுவை (02) மாவட்டங்களில் குறைந்தளவு சுயேட்சைக் குழுக்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளன.
இதேவேளை, 17 அரசியல் கட்சிகளும் 16 சுயேற்சைக் குழுக்களும் நேற்றைய தினம் மாலை வரை வேட்புமனுக்களை தாக்கல் செய்திருந்தன.
மட்டக்களப்பு மாமவட்திலேயே நேற்றைய தினம் வரை அதிகளவு (05) வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.



