
நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் – தங்களின் தனிப்பட்ட பாதுகாப்பு குறித்து எழுப்பிய கவலைகளைத் தொடர்ந்து, அவர்களின் பாதுகாப்புக்காக இரண்டு உரிமம் பெற்ற துப்பாக்கிகளை (ரிப்பீட்டர் ஷொட்கன்) பெறலாம் என்று அவர்களுக்குத் தெரிவிக்க பாதுகாப்பு அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர்கள் தனிப்பட்ட பாதுகாப்பிற்காக வைத்திருப்பதற்கு உரிமையுள்ள பிஸ்டல் ரக துப்பாக்கிக்கு மேலதிகமாக இவை வழங்கப்படவுள்ளன.
இந்தத் துப்பாக்கிகள் ஆண்டுதோறும் உரிமம் புதுப்பிக்கப்பட வேண்டியவை எனும் அடிப்படையில், நாடாளுமன்ற உறுப்பினர் பெற்றுக் கொள்ளக் கூடிய மேற்படி இரண்டு துப்பாக்கிகளையும், உரிமம் பெற்றவர் நாடாளுமன்றத்தில் இருந்து வெளியேறிய பின்னரும் தக்க வைத்துக் கொள்ள முடியும் என்று தெரிய வந்துள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களினதும் சொத்துக்களின் பாதுகாப்பிற்காகவும் இரண்டு ‘ரிபீட்டர்’ துப்பாக்கிகளைப் பெற்றுக் கொள்ள முடியும் என, ஜூலை மாதம், நாடாளுமன்ற செயலாளர் நாயகம் அறிவித்திருந்தார்.
இவ்வாறு துப்பாக்கிகளைப் பெற்றுக் கொள்ள முடியும் என – பாதுகாப்பு அமைச்சு கடிதம் மூலம் தெரியப்படுத்தியிருந்தது.
2022 மே 9ஆம் திகதி காலியில் ‘அரகலய’ போராட்டக்காரர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலைத் தொடர்ந்து ஏற்பட்ட உள்நாட்டுக் கலவரத்தின் போது, அரசாங்க அமைச்சர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டு உறுப்பினர்களின் பல வீடுகள் தீக்கிரையாக்கப்பட்ட. இவற்றினைத் தொடர்ந்து பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் தம்மைப் பாதுகாத்துக் கொள்வதற்கான திறனை அதிகரிக்குமாறு கோரிக்கை விடுத்திருந்தனர்.
நாடாளுமன்ற உறுப்பினர்கள் மேற்கூறப்பட்ட துப்பாக்கிகளைப் பெற்றுக் கொள்ள முடியும் என்பதைத் தெரியப்படுத்தி – நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளதை நாடாளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹனதீர உறுதிப்படுத்தினார்.
“துப்பாக்கிகளை வாங்குவதற்கு அவர்கள் பணம் செலுத்த வேண்டும். அவர்கள் ஒவ்வொரு ஆண்டும் உரிமத்தை புதுப்பிக்க வேண்டும். மேலும், அதற்கு வழங்கப்பட்ட துப்பாக்கி உரிமம் தற்போதையதாகவும் மாற்ற முடியாத முடியாததாகவும் இருக்கும்” என்று பாதுகாப்பு அமைச்சின் பெயர் வெளியிட விரும்பாத மூத்த அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
இந்தத் துப்பாக்கிகளை பெறுவதற்கு நிறுவனத்திடம் இருந்து வாங்குவதற்கு கிடைக்கின்றன. ஒவ்வொன்றும் 250,000 தொடக்கம் 400,000 வரை செலவாகும்.



