தலைப்புச் செய்திகள்

06 வேட்பாளர்களுக்கு கட்டுப் பணம் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிப்பு

னாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்காக இதுவரை 06 வேட்பாளர்களுக்கு கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதில் இரண்டு சுயேச்சை வேட்பாளர்களும், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் நான்கு வேட்பாளர்களும் அடங்குவர்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் கீர்த்திரத்ன ஆகியோர் சுயேட்சை வேட்பாளர்களாக பணம் செலுத்தியுள்ளனர். ஓஷல ஹேரத் (அபிநவ நிவாஹல் பெரமுன), ஏ.எஸ்.பி. லியனகே ஸ்ரீலங்கா தொழிலாளர் கட்சி), சஜித் பிரேமதாச (ஐக்கிய மக்கள் சக்தி) மற்றும் பி.டபிள்யூ.எஸ்.கே. பண்டாரநாயக்க (ஜாதிக சன்வர்தன பெரமுன) ஆகியோர் கட்சி வேட்பாளர்களாக பணம் செலுத்தியுள்ளனர்.

செப்டம்பர் 21 ஆம் திகதி, ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்கெடுப்பு நடத்தப்படும் என, தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.