தலைப்புச் செய்திகள்

‘புதிது’ செய்தி வெளியானதை அடுத்து, வைத்தியசாலை மருந்துக் களஞ்சியத்துக்கு குளிரூட்டிகள் பொருத்தப்பட்டன

– அஹமட் –

ட்டாளைச்சேனை பிரதேச வைத்தியசாலையின் மருந்துக் களஞ்சியம் – குளிரூட்டி இல்லாமல் இயங்குவதைச் சுட்டிக்காட்டி ‘புதிது’ செய்தி வெளியிட்டமையை அடுத்து, அங்கு இரண்டு குளிரூட்டிகள் பொருத்தப்பட்டுள்ளன.

குறித்த வைத்தியசாலையின் மருந்துக் களஞ்சியம் – குளிரூட்டியின்றி நீண்ட காலமாக இயங்கி வந்தது. இது குறித்து வைத்தியசாலைத் தரப்பினர் – கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் காரியாலயத்துக்கு அறிவித்தும் எதுவித நடவடிக்கைகளும் மேற் கொள்ளப்படவில்லை.

இந்த நிலையில், கடந்த 24ஆம் திகதி, இது குறித்து ‘புதிது’ செய்தித்தளம் படங்களுடன் தகவல்களை வெளியிட்டிருந்தது.

இதனையடுத்து அட்டாளைச்சேனை பிரதேச வைத்தியசாலைக்கு மறுநாள் (25) கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மற்றும் அதிகாரிகள் விஜயம் செய்து நிலைகளை பார்வையிட்டனர்.

இந்தப் பின்னணியில் தற்போது வைத்தியசாலையின் மருந்துக் களஞ்சியத்துக்கு குளிரூட்டிகள் பொருத்தப்பட்டுள்ளன.

தொடர்பான செய்தி: அட்டாளைச்சேனை வைத்தியசாலை குறைபாடு தொடர்பில் வெளியிடப்பட்ட ‘புதிது’ செய்திக்குப் பலன்: பிராந்திய பணிப்பாளர் களத்துக்கு உடனடி விஜயம்