இரண்டு மில்லியன் ‘சிம்’ அட்டைகள், முறையான அடையாளங்கள் இன்றி பாவனையில் உள்ளன

🕔 July 9, 2024

முறையான அடையாளங்கள் இன்றி சுமார் இரண்டு மில்லியன் ‘சிம்’ அட்டைகள் நாட்டில் பாவனையில் இருப்பதாக தொழில்நுட்ப ராஜாங்க அமைச்சர் கனக ஹேரத் தெரிவித்துள்ளார்.

இதனால் நாட்டில் சில குற்றச் சம்பவங்களைக் கண்டறிவதில் பாரிய பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

2018 ஆம் ஆண்டுக்கு முன்னர் ‘சிம்’ அட்டைகளை பெற்றுக்கொள்ளும் போது, அடையாள அட்டைகள் அவசியமில்லை எனவும் அவர் இதன் போது கூறினார்.

2018ஆம் ஆண்டுக்கு முன்னர் முறையான அடையாளங்கள் இன்றி பெறப்பட்ட சுமார் இரண்டு மில்லியன் ‘சிம்’ கார்டுகள் தற்போது பாவனையில் உள்ளதாகவும், இது சில குற்றச் சம்பவங்களைக் கண்டுபிடிப்பதில் கடுமையான சிக்கல்களை ஏற்படுத்தியுள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

இலங்கை தொலைத்தொடர்பு (திருத்தம்) சட்டமூலம் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய அமைச்சர், ‘சிம்’ கார்டுகளை பெற்றுக்கொள்ளும் போது தவறான தகவல்களை வெளியிடுபவர்களுக்கு எதிராக சட்டமூலம் சட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளதாகவும் ராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்