“ஒக்டோபர் 05இல் ஜனாதிபதித் தேர்தல்”: அமைச்சர் ஹரின் கூறியதை, தேர்தல்கள் ஆணைக்குழு நிராகரித்தது

🕔 June 16, 2024

னாதிபதித் தேர்தல் ஒக்டோபர் 05ஆம் திகதி நடைபெறும் என, சுற்றுலா மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெனாண்டோ தெரிவித்தமையை, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க நிராகரித்துள்ளார்.

“ஜூலை 17ஆம் திகதி தொடக்கம், தேர்தல் திகதியைத் தீர்மானிப்பதற்காக, தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் சுயாதீனமாக கூடுவார்கள்” என, அவர் கூறியுள்ளார்.

“அமைச்சரவை அல்லது ஜனாதிபதி உட்பட எந்தவொரு வெளிப்புற அமைப்பினதும் அங்கிகாரததைப் பெற வேண்டிய கட்டாயமின்றி, தேர்தலுக்கான திகதியை நாங்கள் பகிரங்கமாக அறிவிப்போம்” எனவும் அவர் குறிப்பிட்டார்.

செப்டெம்பர் 17ஆம் திகதிக்குப் பின்னரே தேர்தலுக்கான வேலைகளை ஆரம்பிக்க முடியும் என்றும், அதனைத் தொடர்ந்து நான்கு முதல் 06 வாரங்கள் வரையிலான தயார்படுத்தல் காலம் கட்டாயமாக இருக்க வேண்டும் என்றும் ரத்நாயக்க தெளிவுபடுத்தினார்.

தேர்தல் அறிவிக்கப்பட்டு 17-21 நாட்களுக்குள் வேட்புமனுவை சமர்ப்பிக்கும் திகதி நிர்ணயிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

தொடர்பான செய்தி: ஒக்டோபர் 05ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தல்

Comments

புதிது பேஸ்புக் பக்கம்