கல்முனை உப பிரதேச செயலகத்தை தரமுயர்த்தக் கோரி, இன்றும் ஆர்ப்பாட்டம்

🕔 June 24, 2024

– பாறுக் ஷிஹான் –

ல்முனை உப பிரதேச செயலகத் தரமுயர்த்தக் கோரி – அங்குள்ள தமிழ் மக்கள் இன்றும் (24) கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இவர்கள் கல்முனை உப பிரதேச செயலகத்தின் பிரதான நுழைவாயிலை மூடியதோடு, பிரதேச செயலகத்தினுள் உத்தியோகத்தர்களையும் நுழைய விடாமல் தடுத்தனர்.

இதன்போது, ”அரசு எமக்கு தீர்வை தர வேண்டும்” என, அவர்கள் கோஷமிட்டனர்.

குறித்த  உப பிரதேச செயலகத்தின் முன்பாக கடந்த மார்ச் மாதம்  திங்கட்கிழமை (25),   பதாதைகளை தாங்கிய வண்ணம் அங்குள்ள தமிழ் மக்கள் ஆர்ப்பாட்டமொன்றினை முன்னெடுத்திருந்தனர்.

கடந்த 30 வருடங்களுக்கும் மேலாக கல்முனை உப பிரதேச செயலகத்துக்கு எதிராக இடம் பெற்று வரும் சூழ்ச்சிகளையும் நிருவாக அடக்குமுறைகளையும் கண்டிப்பதாக இதன்போது ஆர்ப்பாட்டக்காரர்கள் கூறினர்.

திட்டமிடப்பட்டு பிரதேச செயலக உரிமைகளை ஒடுக்கும் நிருவாக அடக்குமுறைகளை இனியும் பொறுத்துக்கொண்டிருக்க முடியாது எனவும்  அரசாங்கம் இனியும் வாக்குறுதிகளை வழங்கி காலத்தை இழுத்தடிக்காது உடன் தீர்வை தரும் வரை தமது அமைதிப் போராட்டம் தொடரும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டனர்.

குறித்த உப பிரதேச செயலகம் தரமுயர்த்தப்பட வேண்டுமெனக் கோரி, அதன் முன்பு 2019 ஆண்டு – உண்ணாவிரத போராட்டம் நடத்ததாகவும், அரசியல்வாதிகள் பிரமுகர்களின் போலி வாக்குறுதிகளால் தமது போராட்டத்தை கைவிடும் நிலை ஏற்பட்டிருந்ததாகவும் இதன்போது அங்கிருந்தவர்கள் தெரிவித்தனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்