கெஹலிய சார்பில் ஆஜராகப் போவதில்லை: உச்ச நீதிமன்றுக்கு சட்ட மா அதிபர் திணைக்களம் அறிவிப்பு

🕔 June 14, 2024

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட 07 பேரை எதிர்வரும் 28ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மாளிகாகந்த நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குறித்த வழக்கு இன்று (14) மாளிகாகந்த நீதவான் முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தரமற்ற மனித இம்யூனோகுளோபுலின் குப்பிகளை இறக்குமதி செய்த குற்றச்சாட்டில் இவர்கள் விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

பதிவு செய்யப்படாத இரண்டு நிறுவனங்களிடமிருந்து மருந்துகளை கொள்வனவு செய்த வழக்கில் முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹிலிய ரம்புக்வெல்ல மற்றும் கைது செய்யப்பட்ட தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தும் அதிகாரசபையின் அதிகாரிகளின் சார்பில் ஆஜராகப் போவதில்லை என சட்டமா அதிபர் திணைக்களம் இன்று உச்ச நீதிமன்றுக்கு அறிவித்தது.

இவ்வருடம் பெப்ரவரி மாதம் 02ஆம் திகதி கைது செய்யப்பட்ட முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, தொடர்ச்சியாக விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்