சுதந்திரக் கட்சித் தலைமைகளத்தினுள் நுழையத் தடை

🕔 April 6, 2024

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்திற்குள் எந்தவொரு தரப்பினரும் நுழைவதற்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது. கோப்புகள் சில காணாமல் போயுள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில், இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஆரம்பகட்ட விசாரணைகள் முடியும் வரை சுதந்திரக் கட்சியின் தலைமையகத்துக்குள் செல்வது தடைசெய்யப்பட்டுள்ளதாக  பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் சில கோப்புகள் காணாமல் போயுள்ளதாக, அந்தக் கட்சியின் பதில் பொதுச் செயலாளர்  துஷ்மந்த மித்ரபால நேற்று (05) மருதானை பொலிஸில் முறைப்பாடு செய்திருந்தார்.

இது தொடர்பில் மருதானை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் இதன் காரணமாக இன்று (06) பிற்பகல் வரை சுதந்திரக் கட்சியின் தலைமையகத்திற்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் பதில் செயலாளர் நாயகம் துஷ்மந்த மித்ரபால தெரிவித்துள்ளார். 

Comments