சுதந்திரக் கட்சியின் தலைவராக செயற்பட மைத்திரிக்கு தடை

🕔 April 4, 2024

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன செயற்படுவதைத் தடுக்கும் வகையில் நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.

கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (04) இந்த இடைக்கால உத்தரவை பிறப்பித்துள்ளது.

1994 ஆம் ஆண்டு முதல் 2005 ஆம் ஆண்டு வரை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக செயற்பட்ட முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தாக்கல் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் மேற்படி நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்