நாடாளுமன்ற உறுப்பினர் நந்தசேன மரணம்

🕔 April 4, 2024

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அனுராதபுரம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கே.எச். நந்தசேன இன்று (04) காலை காலமானார்.

அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவர் மரணித்த போது 69 வயது.

முன்னர் பதவிய பிரதேச சபை மற்றும் வடமத்திய மாகாண சபை உறுப்பினராக கடமையாற்றியுள்ளார். மேலும், மாகாண அமைச்சர் பதவியினையும் வகித்துள்ளார்.

அவர் 2020 நாடாளுமன்றத் தேர்தலில் அனுராதபுர மாவட்டத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளராகப் போட்டியிட்டு நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்