உலகில் வயதான மனிதர் காலமானார்

🕔 April 3, 2024

லகின் மிக வயதான மனிதர் என்று 2022 ஆம் ஆண்டில் கின்னஸ் உலக சாதனையால் சான்றளிக்கப்பட்ட வெனிசுவேலா நாட்டின் ஜுவான் விசென்டே பெரெஸ் மோரா (Juan Vicente Perez Mora) என்பவர் தனது 114 வயதில் நேற்று செவ்வாய்க்கிழமை (02) காலமானார்.

இவர் மே 27, 1909 இல் பிறந்தவர். அடுத்த மாதம் – ஜுவான் விசென்டே பெரெஸ் மோராவின் 115ஆவது பிறந்த நாள்.

“ஜுவான் விசென்டே பெரெஸ் மோரா 114 வயதில் நித்தியத்தை கடந்துவிட்டார்” என்று வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ எக்ஸ் தளத்தில் தெரிவிதுள்ளார்.

கின்னஸ் படி, ஜுவான் விசென்டே பெரெஸ் மோரா – பெப்ரவரி 4, 2022 அன்று 112 வயது மற்றும் 253 நாட்கள் வயதைக் கொண்ட உயிருடன் இருக்கும் மிக வயதான மனிதர் என – அதிகாரபூர்வமாக உறுதிப்படுத்தப்பட்டார்.

2022 நிலவரப்படி அவர் 11 குழந்தைகளின் தந்தை. அவருக்கு 41 பேரக்குழந்தைகளும், 18 கொள்ளுப் பேரக்குழந்தைகளும் மற்றும் 12 கொள்ளுப் பேரக்குழந்தைகளின் பிள்ளைகளும் இருந்தனர்.

ஜுவான் விசென்டே பெரெஸ் மோராவின் பெற்றோருக்குப் பிறந்த 10 குழந்தைகளில் ஒன்பதாவது பிள்ளையாவார்.

“ஐந்தாவது வயதில், அவர் தனது அப்பா மற்றும் சகோதரர்களுடன் விவசாயத்தில் பணியாற்றத் தொடங்கினார். கரும்பு மற்றும் கோப்பி அறுவடைக்கு உதவினார்” என்று 2022 இன் கின்னஸ் அறிக்கை கூறுகிறது.

“கடினமாக வேலை செய்தல், விடுமுறை நாட்களில் ஓய்வெடுப்பது, சீக்கிரம் தூங்கச் செல்வது, தினமும் ஒரு கிளாஸ் அகார்டியன்ட் குடிப்பது, கடவுளை நேசிப்பது, எப்போதும் அவரைத் தன் இதயத்தில் சுமந்து செல்வது” போன்றவை தனது நீண்ட ஆயுளுக்குக் காரணம் என, கின்னஸ்ஸுக்கு வழங்கிய பேட்டியில் கூறியிருந்தார்.

அவர் – எடியோஃபினா டெல் ரொசாரியோ கார்சியாவை திருமணம் செய்து 06 தசாப்தங்களுக்கும் மேலாக ்சேர்ந்து வாழ்ந்தார். 1997இல் மனைவ மறைந்தார். அவர்களுக்கு 06 மகன்களும், ஐந்து மகள்களும் பிறந்தனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்