எரிவாயு விலை இன்று குறைகிறது

🕔 April 1, 2024

லிட்ரோ எரிவாயுவின் விலை இன்று (01) நள்ளிரவு தொடக்கம் குறைவடையவுள்ளது என, அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.

அதன்படி 12.5 கிலோகிராம் லிட்ரோ எரிவாயுவின் விலை 135 ரூபாயினால் குறைவடைகிறது. இதற்கிணங்க அதன் புதிய விலை 4,115 ரூபாயாக இருக்கும்.

05 கிலோ எரிவாயுவின் விலை 55 ரூபாயினால் குறைந்து, புதிய சில்லறை விலை 1,652 ரூபாயாக இருக்கும்.

2.3 கிலோ எடையுள்ள எரிவாயு 23 ரூபாயினால் குறைந்து, புதிய சில்லறை விலை 772 ரூபாயாக அமையும்.

இன்றை தினம் எரிபொருள் சிலவற்றின் விலைகளை – இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் குறைந்துள்ள நிலையில், எரிவாயுக்கான விலையும் இவ்வாறு குறைகிறது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்