ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தீர்மானத்துக்கு, நீதிமன்றம் இடைக்காலத் தடை

🕔 April 1, 2024

துமிந்த திசாநாயக்க, லசந்த அலகியவன்ன மற்றும் மஹிந்த அமரவீர ஆகியோர் – ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் வகித்த பதவிகளில் இருந்து நீக்குவதற்கு, அந்தக் கட்சியின் செயற்குழு எடுத்த தீர்மானத்துக்கு கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இடைக்காலத் தடையுத்தரவு பிறப்பித்துள்ளது.

துமிந்த திசாநாயக்க, லசந்த அலகியவன்ன மற்றும் மஹிந்த அமரவீர ஆகியோரை – கட்சியில் அவர்கள் வகித்த பதவிகளில் இருந்து நீக்குவதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயற்குழு, செவ்வாய்கிழமை (மார்ச் 30) நடைபெற்ற விசேட கட்சி கூட்டத்தின் போது தீர்மானித்தது.

இதன்படி, தேசிய அமைப்பாளர் பதவியில் இருந்து துமிந்த திஸாநாயக்கவும், பொருளாளர் பதவியிலிருந்து லசந்த அலகியவன்னவும், சிரேஷ்ட உப தலைவர் பதவியிலிருந்து மஹிந்த அமரவீரவும் நீக்கப்பட்டனர்.

இதற்கிடையில், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட பிரதித் தலைவர், பொருளாளர் மற்றும் தேசிய அமைப்பாளர் ஆகிய பதவிகளுக்கு புதியவர்கள் நியமிக்கப்பட்டனர்.

தொடர்பான செய்தி: சுதந்திரக் கட்சியின் முக்கிய பதவிகளில் இருந்து துமிந்த, லசந்த, மஹிந்த நீக்கம்

Comments

புதிது பேஸ்புக் பக்கம்