ஞானசார தேரருக்கு ஏன் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது?: இஸ்லாத்துக்கும், முஸ்லிம்களுக்கும் எதிராக அவர் என்ன பேசினார்?

🕔 March 28, 2024

னங்­க­ளுக்கு இடையே, நல்­லி­ணக்­கத்தை பாதிக்கும் வித­மாக கருத்து வெளி­யிட்­ட குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதன் அடிப்படையில் – பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் ஞானசார தேரருக்கு 04 வருட கடூழிய சிறைத்தண்டனை இன்று (28) விதிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஆதித்ய பட்டபெந்திகே இந்த தீர்ப்பை வழங்கியுள்ளார்.

என்ன நடந்தது?

கொழும்பு – கிரு­லப்­ப­னையில் 2016 ஆம் ஆண்டு நொவம்பர் மாதம் ஊடக சந்­திப்­பொன்­றினை நடத்திய ஞானசார தேரர், வெறுப்­பூட்டும் வகையில் பேசியதாகவும், அது நல்லிணக்கத்துக்கு குந்தகத்தை ஏற்படுத்தும் விதமாக பேசியிருந்தார்.

அது தொடர்பில் முன்னாள் மேல் மாகாண ஆளுநர் ஆசாத் சாலி, முன்னாள் நாடாளுமன்ற உறுப்­பினர் முஜிபுர் ரஹ்மான் ஆகியோர், ஞானசார தேரரின் பேச்சுக்கு எதிராக பொலிஸில் முறைப்பாடு செய்திருந்தனர்.

அதற்கிணங்க – தண்­டனை சட்டக் கோவையின் 291(அ) பிரிவின் கீழ் ஞானசாரதேரர் தண்டனைக்குரிய குற்றம் ஒன்­றினை புரிந்ததாக, சட்ட மா அதி­பர் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தார்.

மேற்சொன்ன ஊடக சந்திப்பில் – பலாங்­கொடை ஜெய்­லானி பள்ளிவாசல் விவ­காரம் குறித்து பேசிய ஞானசார தேரர், கூர­கல பெளத்த புரா­தன சின்­னங்­களை முஸ்­லிம்கள் ஆக்­கி­ர­மிப்­ப­தா­கவும் கூறிய ஞானசார தேரர் – அல்­லாஹ்வை கேவலமான வச­னங்­களைக் கொண்டு தூற்றும் வித­மாகவும் கருத்து வெளி­யிட்டார்.

இதனை அடிப்படையாக வைத்தே, ஞானசார தேரருக்கு எதிராக மேல் நீதி­மன்றில் – சட்ட மா அதி­பரால் குற்றப் பத்­தி­ரிகை தாக்கல் செய்­யப்­பட்டதோடு, கொழும்பு மேல் நீதி­மன்றத்தில் இது தொடர்பில் எச்.சி.1948/20 எனும் வழக்குத் தொடரப்பட்டது.

இந்த வழக்கை சுமு­க­மாக முடித்­துக்­கொள்ள கல­கொட அத்தே ஞான­சார தேரர் முயற்­சித்திருந்ததோடு, குறித்த ஊடக சந்திப்பில் தனது பேச்சு முஸ்லிம்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியிருந்தால் அதற்காக மன்னிப்புக் கோருவதாகவும் அண்மையில் அவர் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையிலேயே அவருக்கு 04 வருட சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

தொடர்பான செய்தி: இஸ்லாத்தை அவமதித்துப் பேசிய குற்றச்சாட்டு: ஞானசார தேரருக்கு 04 வருட கடூழிய சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பு

Comments

புதிது பேஸ்புக் பக்கம்