சிறுநீரக வர்த்தகத்தில் 05 தனியார் மருத்துவமனைகள் தொடர்பு; விசாரணைக்குழு அறிக்கை

🕔 February 6, 2016

Kiney issue - 022
ட்டவிரோத சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை வர்த்தகத்தில், இலங்கையிலுள்ள 05 தனியார் மருத்துவமனைகள் ஈடுபட்டதாக, தெரியவருகிறது.

இவ்விவகாரம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட ஐவர் அடங்கிய குழுவினர் இவ்விடயத்தினைக் கண்டறிந்துள்ளனர்.

மேலும், இதில் இலங்கை மருத்துவர்கள் சிலரும் தொடர்புபட்டுள்ளதாகவும் தெரியவருகிறது.

மேற்படி ஐவர் அடங்கிய குழுவின் அறிக்கை, சுகாதாரத்துறை அமைச்சர் ராஜித சேனாரத்னவிடம் நேற்று வெள்ளிக்கிழமை மாலை கையளிக்கப்பட்டது.

அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட, மருத்துவர் ஒருவரின்  பெயரும் அறிக்கையில் உள்ளடங்கியிருப்பதாக அறிக்கையினைத் தயாரித்த குழுவின் தலைவர் ஜயசுந்தர பண்டார தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் இடம்பெற்ற சிறுநீரக விற்பனை செயற்பாடுகளில் இலங்கை மருத்துவர்கள் சிலரும் தொடர்புட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் அண்மையில் செய்தி வெளியிட்டிருந்தன.

இந்த விடயம் தொடர்பாக சுகாதார அமைச்சின் பிரதிப் பணிப்பாளர் நாயகம் ஜயசுந்தர பண்டாரவின் தலைமையில் 05 பேர் கொண்ட விசாரணை குழு,  சுகாதார அமைச்சரினால் நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்