சபாநாயகர் மீதான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு சுதந்திரக் கட்சி ஆதரவு

🕔 February 28, 2024

பாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணைக்கு – ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆதரவளிப்பதாக அறிவித்துள்ளது.

இதன்படி, சபாநாயகருக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொண்டு வரவுள்ள பிரேரணைக்கு ஆதரவளிப்பதாகவும், அதற்கு ஆதரவாக வாக்களிப்பதாகவும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி கூறியுள்ளது.

நேற்று முன்தினம் திங்கட்கிழமை (26) ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையிலான பல எதிர்க்கட்சி உறுப்பினர்கள், சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையில், அவர் அரசியலமைப்பை மீறியதாகத் தெரிவித்து கையெழுத்திட்டனர்.

அந்தவகையில், எம்.ஏ.சுமந்திரன், லக்ஷ்மன் கிரியெல்ல, பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ், திஸ்ஸ அத்தநாயக்க, சந்திம வீரக்கொடி மற்றும் ஷான் விஜயலால் டி சில்வா உட்பட நாடாளுமன்ற எதிர்க்கட்சியைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் கையொப்பமிட்டுள்ளனர்.

இணைய பாதுகாப்பு சட்டமூலத்தின் 13, 17, 20, 33 (6), 34 (1), 35 (1), 21, 22 மற்றும் 33 ஆகிய பிரிவுகள் தொடர்பான உச்ச நீதிமன்றத்தின் பரிந்துரைகளை சபாநாயகர் புறக்கணித்ததாக நம்பிக்கையில்லாப் பிரேரணையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. .

இந்த மாத தொடக்கத்தில், எதிர்க்கட்சித் தலைவர், இணையப் பாதுகாப்புச் சட்டத்தை இயற்றும் போது, உச்ச நீதிமன்றம் வழங்கிய ஒன்பது பரிந்துரைகளை சபாநாயகர் புறக்கணித்துவிட்டார் என்றும், அவர் மீது அவர்களுக்கு நம்பிக்கை இல்லை என்றும் தெரிவித்திருந்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்