பொலிஸ் மா அதிபராக தேசபந்து தென்னகோன் நியமனம்

🕔 February 26, 2024

சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிரும், பதில் பொலிஸ் மா அதிபருமான தேசபந்து டி.எம்.டபிள்யூ.டி. தென்னகோன் புதிய பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 41ஆ.(1) மற்றும் 61ஈ(ஆ) ஏற்பாடுகளின் பிரகாரம், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்துக்கு அமைவாக இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவினால் இன்று (26) பிற்பகல் தேசபந்து தென்னகோனிடம் நியமனக் கடிதம் வழங்கப்பட்டது.

(ஜனாதிபதி ஊடகப் பிரிவு)

Comments

புதிது பேஸ்புக் பக்கம்