பிரபல நடிகர் உத்திக பிரேமரத்ன, நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜிநாமா செய்தார்

🕔 February 27, 2024

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் உத்திக பிரேமரத்ன தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

அநுராதபுரம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் உத்திக – அவரின் ராஜினாமா கடிதத்தை நாடாளுமன்ற பிரதிப் பொதுச் செயலாளரிடம் இன்று (27) கையளித்துள்ளார்.

இதன்படி, உத்திக பிரேமரத்ன ராஜினாமா செய்ததையடுத்து வெற்றிடமாக உள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ஆசனம் தொடர்பில், தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அறிவிக்கப்படும் என நாடாளுமன்றத்தின் தொடர்பாடல் பிரிவுவெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரபல நடிகர் உத்திக 2020ஆம் ஆண்டு நடாளுமன்றத் தேர்தலில் அனுராதபுரம் மாவட்டத்தில் இருந்து ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் போட்டியிட்டார்.

இதன் அடிப்படையில் அவர் 133,550 வாக்குகளைப் பெற்று நாடாளுமன்றுக்குத் தெரிவானார்.

இளம் தலைவராக மாற்றத்தை உருவாக்கும் நம்பிக்கையில் – தான் அரசியல் களத்தில் பிரவேசித்ததாக உத்திக பிரேமரத்ன தனது ராஜினாமா கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

இருப்பினும் கடந்த சில ஆண்டுகளாக அதற்கான வாய்ப்பு கிடைக்காததால், தனி மனிதனாக தனது பணியை முன்னெடுத்துச் செல்வது கடினம் என குறிப்பிட்டுள்ளார்.

மேற்கூறிய காரணங்களை சுட்டிக்காட்டி – உத்திக பிரேமரத்ன தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலக தீர்மானித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்