கணவரின் மரணத்தில் சந்தேகம்; விசாரணை நடத்துங்கள்: சனத் நிஷாந்தவின் மனைவி சட்டத்தரணி சமரி பிரியங்கா, சிஐடியில் முறைப்பாடு

🕔 February 7, 2024

காலஞ்சென்ற ராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக – அவரின் மனைவி சட்டத்தரணி சமரி பிரியங்கா – குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் (சிஐடி) முறைப்பாடு செய்துள்ளார்.

இதன்படி, தனது கணவரின் மரணம் தொடர்பான சில காரணிகள் சந்தேகத்திற்குரியதாக இருப்பதாக, அவர் தனது முறைப்பாட்டில் கூறியுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்துமாறும் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஜனவரி 25ஆம் திகதியன்று, சனத் நிஷாந்தவின் வாகனம் கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில், அதிகாலை 02:00 மணியளவில் – பயணித்துக் கொண்டிருந்த பார ஊர்தி மீது மோதி, வீதியோரத் தடையில் மோதி விபத்துக்குள்ளானது.

இதனையடுத்து ராஜாங்க அமைச்சர் உட்பட காயமடைந்த மூவர் – ராகம வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஆனால் சனாத் நிஷாந்தவும் அவரின் பாதுகாவலரும் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது. இந்த விபத்தில் ராஜாங்க அமைச்சரின் சாரதி காயங்களுடன் உயிர் பிழைத்தார்.

பினனர் சாரதி ஜனவரி 26 அன்று கைது செய்யப்பட்டு – விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த 05ஆம் திகதியன்று பிணை வழங்கப்பட்டது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்