சட்டத்துக்கு முரணான நடவடிக்கைக்கு எதிராக, அக்கரைப்பற்று தனியார் பஸ் உரிமையாளர்கள் ஆர்ப்பாட்டம்

🕔 January 13, 2024

க்கரைப்பற்று தனியார் பஸ் நிலைய அதிகாரிகள் மேற்கொள்ளும் சட்டத்துக்கு முரணான நடவடிக்கைகளைக் கண்டித்து, அக்கரைப்பற்று தனியார் பஸ் நிலையத்தில் பஸ் உரிமையாளர்கள் இன்று (13) ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டனர்.

கிழக்கு மாகாண வீதிப்பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தற்காலிக திட்டமிடல் பணிப்பாளர், அம்பாறை மாவட்ட காரியாளய போக்குவரத்து அதிகாரி மற்றும் அக்கரைப்பற்று தனியார் பஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆகியோர் அக்கரைப்பற்று – கல்முனை வீதியில் சேவையில் ஈடுபடும் பஸ்களுடைய சுழற்சி முறை நேர அட்டவணைக்குள், மேலதிக பஸ் வண்டிகளுக்கு சட்டத்திற்கு முரணாக நேரம் வழங்கி வருவதாக, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் குற்றஞ்சாட்டினர்.

இதனையடுத்து அக்கரைப்பற்று போக்குவரத்து பொலிஸார் மற்றும் தென்கிழக்கு கரையோர தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் மற்றும் செயலாளர் ஆகியோர் ஆர்ப்பாட்டம் நடைபெற்ற இடத்துக்கு வந்து, அம்பாறை மாவட்ட முகாமையாளரைத் தொடர்பு கொண்டு பேசினர்.

இதன்போது நேர அட்டவணை மாற்றம் செய்தமை முகாமையாளருக்கு அறிவிக்கப்படவில்லை என தெரிவித்ததோடு, அக்கரைப்பற்று கல்முனை வீதியில் சுழற்சி முறையில் சேவையில் ஈடுபடும் பஸ் வண்டிகளை வழமை போல் சேவையில் ஈடுபடுமாறும் அறிவித்தார்.அ

இதனையடுத்து ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டு, பஸ்கள் வழமையான சேவைக்கு திரும்பின.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்