நிந்தவூர் பிரதேசத்தில் போதைப் பொருள் ஆசாமிகள் கைது; பணமும் சிக்கியது

🕔 January 9, 2024

பாறுக் ஷிஹான்

போதைப்பொருட்களை சூட்சுமமாக தம்வசம் வைத்திருந்த மூவரை நிந்தவூர் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

நிந்தவூர் – அட்டப்பள்ளம்  பிரதேசத்தில் நேற்று திங்கட்கிழமை (8)  மாலை நிந்தவூர் பொலிஸார் மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பின் போது பெருந்தொகையான பணம், போதைப் பொருள்கள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.

 நிந்தவூர் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஏ.எம். நஜீப்  வழிநடத்தலில் ரகசிய தகவலின் அடிப்படையில் இந்தச் சுற்றி வளைப்பு மேற்கொள்ளப்பட்டது.

கைது செய்யப்பட்ட 32, 33 மற்றும் 34 வயதுடைய வயதுடையவர்களாவர். இவர்கிளடம் தொடர்ந்தும் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

யுக்திய எனும் போதைப்பொருள் எதிர்ப்பு விசேட நடவடிக்கையின் கீழ் இந்த சுற்றி வளைப்பு மேற்கொள்ளப்பட்டது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்