‘யுக்திய’ நடவடிக்கையின் கீழ் 100 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான சொத்து, வாகனங்கள் சிக்கின

🕔 January 8, 2024

யுக்திய’ எனும் போதைப்பொருள் தடுப்பு விசேட நடவடிக்கையின் கீழ், பொலிஸ் திணைக்களத்தின் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவினர் 100 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான சொத்துக்களைக் கைப்பற்றியுளனர் என, பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் தெரிவித்துள்ளார்.

அந்த வகையில் 45 மில்லியன் பெறுமதியான சொத்துக்கள் மற்றும் காணிககளும், 61 மில்லியன் ரூபாய் பெறுமதியான சொகுசு வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைப்பற்றப்பட்ட வாகனங்களின் விபரம் வருமாறு;

  • டொயோட்டா லேண்ட் க்ரூசர் பிராடோ 33 மில்லியன் ரூபாய்
  • டொயோட்டா கேடிஎச் ரூ. 13 மில்லியன் ரூபாய்
  • டொயோட்டா சி.எச்.ஆர் 7.6 மில்லியன் ரூபாய்
  • டொயோட்டா அக்வா 6.4 மில்லியன் ரூபாய்
  • பஜாஜ் முச்சக்கர வாகனம் 01 மில்லியன் ரூபாய்

கைப்பற்றப்பட்ட காணி விபரங்கள்

  • தலகலயில் 7.5 பேர்ச் காணி 1.5 மில்லியன் ரூபாய் பெறுமதியானது
  • மாலபேயில் 05 பேர்ச் காணி 4.5 மில்லியன் ரூபாய் பெறுமதியானது
  • ஜா-எலயில் 12.5 பேர்ச் காணியுடன் இரண்டு மாடி வீடு 24 மில்லியன் ரூபாய் பெறுமதியானது
  • நிவந்தன-தெற்கு, ஜா-எலவில் அமைந்துள்ள காணி 15 மில்லியன் பெறுமதியானது

Comments

புதிது பேஸ்புக் பக்கம்