பலஸ்தீன் கணவர்களுடன் காஸாவில் வாழ்ந்த இலங்கைப் பெண்கள் இருவர், பிள்ளைகளுடன் நாடு திரும்பினர்

🕔 January 3, 2024

– அஷ்ரப் ஏ சமத் –

லஸ்தீனர்களைத் திருமணம் செய்து – அங்கு 20 வருடங்களுக்கும் மேல் வாழ்ந்து வந்த இலங்கைப் பெண்கள் இருவர், தமது குழந்தைகளுடன் இலங்கை வந்துள்ளனர்.

இலங்கையைச் சேர்ந்த இரண்டு பெண்கள் தொழில் நிமித்தம் மத்திய கிழக்கு நாடுகளுக்குச் சென்று, அங்கிருந்தவாறே பலஸ்தீனர்களைத் திருமணம் முடித்து, பலஸ்தீன் – காஸாவில் 20 வருடங்களுக்கும் மேல் வாழ்ந்தனர்.

இவர்களில் ஒரு பெண்ணுக்கு 04 குழந்தைகளும் மற்றைய பெண்ணுக்கு 05 குழந்தைகள் உள்ளனர்   .

இந்த நிலையில் பலஸ்தீனில் இஸ்ரேல் நடத்திவரும் போர் காரணமாக, இக்குடும்பங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்ட நிலையில், மேற்படி தாய்மார் இருவரும் அவர்களின் 09 குழந்தைகளும் கடந்த வாரம்  இலங்கை வந்தனர்.

இந்த நிலையில் இவர்கள் நேற்று (02) கொழும்பிலுள்ள பலஸ்தீன் துாதுவராலயத்தில் ஊடக சந்திப்பொன்றை நடத்தி, தமது துயரங்களை கண்ணீர் மல்க வெளிப்படுத்தினர்.

அங்கு அவர்கள் அனுபவித்த கஸ்டங்கள், குழந்தைகள் இறப்பு, சிறுவர்கள் மற்றும் வயோதிபர்கள் கொலை செய்யப்பட்டமை, சொத்துக்கள் மற்றும் வைத்தியசாலைகள் அழிக்கப்பட்டமை, மனிதப் படுகொலைகள், உணவு, உடை, நீர் வசதியின்றி வீதிகளிலும், முகாம்களிலும் அனுபவதித்த துன்பங்கள் போன்றவற்றை வெளிப்படுத்தினர்.

அங்கு பேசிய இரண்டு பெண்களில் ஒருவர் – தனது கணவரின் உறவினர்கள் 50 பேர் கொலை செய்யப்பட்டதாகத் தெரிவித்தார்.

இவர்களுள் ஒரு பெண் தெமட்டக்கொட பிரதசத்தைச் சேர்ந்தவர். அவருக்கு 04 பிள்ளைகள் உள்ளனர். குழந்தைகள் அனைவரும் பலஸ்தீனத்தில் பிறந்தவர்கள். அங்கு ஆரம்பக் கல்வியை அரபு மொழியில் கற்றுள்ளார்கள். தற்பொழுது மருதானையில் உறவினர் வீட்டில் வாழ்வதாக – அவர் தெரிவித்தார்.

மற்றைய பென் கேகாலை மாவட்டம் கொட்டியாக் கும்பர பிரதேசத்தைச் சேர்ந்தவர்.

இதேவேளை, இவர்களின் கணவர்மார்களை இலங்கைக்கு  வரவழைக்க வேண்டுமெனவும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்