எரிவாயு விலைகள் அதிகரிப்பு; லிட்ரோ, லாஃப்ஸ் ஆகிவற்றுக்கிடையில் அதிகளவு விலை வித்தியாசம்

🕔 January 1, 2024

லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலையை இன்று (01) தொடக்கம் அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக லிட்ரோ நிறுவனத்தின் தலைவர்  முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.

12.5 கிலோ கிராம் லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் விலை 685 ரூபாயினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன் புதிய விலை 4,250 ரூபாவாகும்.

5 கிலோ கிராம் லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் விலை 276 ரூபாயினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. புதிய விலை 1,707 ரூபாவாகும்.

2.3 கிலோ கிராம் லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் விலை 127 ரூபாயினால்அதிகரிக்கப்பட்டுள்ளது. புதிய விலை 795 ரூபாவாகும்.

லாஃப்ஸ் சமையல் எரிவாயுவின் விலைகளையும் இன்று முதல் அதிகரிக்கப்பட்டுள்னன.

அதன்படி, 12.5 கிலோ கிராம் லாஃப்ஸ் சமையல் எரிவாயுவின் விலை 755 ரூபாயினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. புதிய விலை 4740 ரூபாய் ஆகும்.

05 கிலோ கிராம் லாஃப்ஸ் சமையல் எரிவாயுவின் விலை 305 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. புதிய விலை 1900 ரூபாய்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்