சேனநாயக சமுத்தித்தின் வான்கதவுகள் இன்றிரவு திறக்கப்படவுள்ளன: எச்சரிக்கையுடன் இருக்குமாறு மக்களுக்கு அறிவுறுத்தல்

🕔 January 1, 2024

ம்பாறை மாவட்டம் – சேனநாயக சமுத்திரத்தின் 05 வான் கதவுகள் இன்று (01) இரவு திறக்கப்படவுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் அம்பாறை மாவட்ட பிரதிப் பணிப்பாளர் எம்.ஏ.சி.எம். றியாஸ் புதிது செய்தித்தளத்துக்கு தெரிவித்தார்.

இதன் காரணமாக ஆறுகள், நீர்நிலைகளின் அண்மித்த இடங்களிலும், தாழ்நிலப் பகுதிகளிலும் வெள்ளம் ஏற்படக்கூடிய அபாயம் உள்ளதாகவும் அவர் எச்சரித்தார்.

”இன்று பிற்பகல் வான்கதவுகள் திறக்கத் திட்டமிடப்பட்டிருந்தன. ஆனால், இது தொடர்பான அறிவுறுத்தல் மக்களை சென்றடைந்த பின்னர் வான்கதவுகளைத் திறக்கத் தீர்மானித்துள்ளோம்” எனவும் அவர் கூறினார்.

சேனநாயக சமுத்திரத்தின் நீர் வடிந்தோடும் மட்டம் 104 அடி என்றும், ஆனால் தற்போது 102.4 அடியை எட்டியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

எனவே ஆறுகள், நீர் நிலைகளை அண்டியும் – தாழ்நிலப் பகுதியிலும் வசிப்போர் விழிப்புணர்வுடன் இருக்குமாறு அவர் கூறினார்.

அட்டாளைச்சேனை, அக்கரைப்பற்று, ஆலையடிவேம்பு, காரைதீவு, சாய்ந்தமருது, சம்மாந்துறை மற்றும் அம்பாறை பிரதேசங்களில் மிகவும் விழிப்புடன் இருக்குமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்