மின்சாரக் கட்டணம் தொடர்பில் மகிழ்ச்சிச் செய்தி: அமைச்சர் கஞ்சன வெளியிட்டார்

🕔 December 19, 2023

மின்சார கட்டணம் எதிர்வரும் ஜனவரி மாதம் திருத்தப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசும்போது அவர் இதனைக் கூறினார்.

இதன்படி, மின் கட்டண திருத்தத்தின் போது – அதிகரிக்கப்பட்ட கட்டணத்தை குறைக்க முடியும் என அமைச்சுக்கு மின்சார சபை அறிவித்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.

மழையுடன் கூடிய வானிலை நிலவுவதாலும், நீர்மின் நிலையங்கள் அதிகபட்ச கொள்ளளவில் இயங்குவதாலும் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்