இலங்கையில் நிகழும் மரணங்களில் 80 வீதமானவை, தொற்றா நோய்களால் ஏற்படுபவை

🕔 December 14, 2023

லங்கையில் வருடாந்தம் நிகழும் மரணங்களில் 80 வீதமானவை தொற்றா நோய்கள் மற்றும் அது தொடர்பான சிக்கல்களினால் ஏற்படுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இலங்கையின் சனத்தொகையில் 35 வயதிற்குட்பட்டவர்களில் 15 வீதமானோர் நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 35 வீதமானோர் உயர் ரத்த அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சு சுட்டிகாட்டியுள்ளது.

உடற்பயிற்சியின்மையே இந்த நிலைக்கு முக்கிய காரணம் என ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளதாகவும் சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, சுகாதார அமைச்சின் வளாகத்தில் உடல் நலன் பிரிவு அண்மையில் சுகாதார அமைச்சின் செயலாளர் டொக்டர் பாலித மஹிபாலவினால் திறந்து வைக்கப்பட்டது.

எதிர்காலத்தில் அரச வைத்தியசாலைகளிலும் இதுபோன்ற உடல் நலப் பிரிவுகளை நிறுவுவதற்கான திட்டங்கள் எடுக்கப்பட்டு வருவதாக சுகாதார அமைச்சு கூறியுள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்