யோசிதவுக்கு வீட்டுச் சாப்பாடு
வெலிக்கடை சிறைச்சாலையில் விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ள யோசித ராஜபக்ஷ உள்ளிட்ட சீ.எஸ்.என். முக்கியஸ்தர்களுக்கு, அவர்களின் வீடுகளிலிருந்து உணவினைப் பெற்றுக் கொள்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
குறித்த நபர்களின் வேண்டு கோளுக்கு இணங்கவே இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளததாகத் தெரியவருகிறது.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இரண்டாவது புதல்வர் யோசித ராஜபக்ஷவுடன், சீ.எஸ்.என். ஊடக நிறுவனத்தின் முக்கியஸ்தர்கள் நால்வர் எதிர்வரும் 11 ஆம் திகதிவரை விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.