போதைப் பொருளுடன் கடலுக்குள் பாய்ந்த ‘ஆலா’; நீச்சல் தெரியாமல் பொலிஸாரிடம் சிக்கினார்: மருதமுனையில் சம்பவம்

🕔 December 7, 2023

– பாறுக் ஷிஹான் –

பாடசாலை மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு நீண்ட காலமாக போதைப்பொருட்களை விநியோகித்து வந்த ‘ஆலா’ என்று அழைக்கப்படும் நபரை விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.

கடந்த திங்கட்கிழமை (4) இரவு விசேட தகவல் ஒன்றினை அடுத்து அம்பாறை மாவட்டம் – பெரியநீலாவணை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் ஜே.எஸ்.கே. வீரசிங்க வழிநடத்தலில், பொலிஸ் குழுவினர் மருதமுனை கடற்கரை பிரதேசத்தில் சிவில் உடையில் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

இதன் போது ‘ஆலா’ என அழைக்கப்படும் 39 வயதுடைய முஹம்மது இஸ்மாயில் அஸ்மீர் என்பவரை பொலிஸார் சுற்றி வளைத்துள்ளனர். இதனையடுத்து அவர் அருகிலுள்ள கடலுக்குள் பாய்ந்து தப்பி செல்ல முயன்றுள்ளாார்.

ஆனால், குறித்த நபருக்கு நீச்சல் தெரியாது திணறியதை அடுத்து, அவரை பொலிஸார் கைது செய்தனர். இதன்போது அவரிடம் 100 கிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டது.

மறுநாள் செவ்வாய்கிழமை (5) சட்ட நடவடிக்கைக்காக – கல்முனை நீதிமன்ற நீதிவான் எம்.எஸ்.எம் சம்சுதீன் முன்னிலையில் சந்தேக நபரை ஆஜர்படுத்திய போது, எதிர்வரும் மாதம் 15 ஆந் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு  உத்தரவிட்டார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்