கஞ்சா மருந்துகளை சட்டபூர்வமாக்கும் மசோதா, ஜப்பான் நாடாளுமன்றில் நிறைவேற்றம்

🕔 December 7, 2023

ஞ்சாவை அடிப்படையாகக் கொண்ட மருந்துகளை சட்டபூர்வமாக்குவதற்கான மசோதா – ஜப்பான் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியுள்ளது. அதே நேரத்தில் கஞ்சாவை பொழுதுபோக்கிற்கு பயன்படுத்துவதற்கான தடையை கடுமையாக்கியுள்ளது.

ஜப்பானிய மேல் சபையில் நேற்று புதன்கிழமை நிறைவேற்றப்பட்ட கஞ்சா மற்றும் போதைப்பொருள் கட்டுப்பாட்டுச் சட்டங்களில் மேற்கொள்ளப்பட்ட மாற்றங்கள், கஞ்சாவிலிருந்து பெறப்பட்ட மருத்துவப் பொருட்கள் மீதான தடையை நீக்குவதற்கு வழி வகுக்கும்.

கஞ்சா அடிப்படையிலான மருந்துகள் கடுமையான வலிப்பு நோய் போன்ற பல்வேறு நிலைமைகளுக்கு சிகிச்சையளிப்பதற்காக – ஏற்கனவே வெளிநாடுகளில் பயன்படுத்தப்படுகிறது.

இந்த மருந்துகளை பெறுவதற்காக பிரச்சாரம் செய்த நோயாளி குழுக்களுக்கு இது ஒரு வெற்றியாகும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இருப்பினும், இந்த மாற்றங்கள் ஜப்பானில் ஏற்கனவே உள்ள கஞ்சா கொள்கையை இறுக்கமாக்குவதாகவும் கூறப்படுகிறது.

திருத்தப்பட்ட சட்டத்தின் படி, கஞ்சாவைப் பயன்படுத்தினால் அல்லது வைத்திருந்தால் ஏழு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்