பாடசாலை மாணவர்களுக்கு நீண்ட காலமாக போதைப்பொருள் விற்றுவந்தவர் கைது

🕔 November 28, 2023

நீண்ட காலமாக பாடசாலை மாணவர்களுக்கு ‘ஐஸ்’ உட்பட பல்வேறு போதைப் பொருட்களை விநியோகித்து வந்த நபரொவருர் – பெரிய நீலாவணை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பெரியநீலாவணை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் நேற்றைய தினம் (27) மாலை 43 வயதுடைய போதைப்பொருள் வியாபாரி சந்தேகத்திற்கிடமாக நடமாடுவதாக பெரியநீலாவணை பொலிஸாருக்கு கிடைத்த தகவலை அடுத்து, சந்தேக நபர் கைதானார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் நீண்ட காலமாக – பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து போதைப்பொருளை விநியோகித்துள்ளார். அவர் வசம்  இருந்து ஒரு தொகை ஐஸ் போதைப் பொருளும் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன.

இவ்வாறு கைதானவரை விசாரணைக்கு உட்படுத்தி –  நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்படுத்த பொலிஸார் நடவடிக்கை முன்னெடுத்து வருகின்றனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்