எரிபொருள் விலைகளில் இன்று நள்ளிரவு தொடக்கம் மாற்றம்: 92 ஒக்டேன் பெற்றோலுக்கு மட்டும் விலை குறைந்தது

🕔 October 31, 2023

ரிபொருள் விலைகளில் இன்று (31) நள்ளிரவு தொடக்கம் மாற்றங்களை மேற்கொள்ளவுள்ளjதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.

அதன்படி 92 ஒக்டேன் பெற்றோல் லீட்டருக்கு 09 ரூபா குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி 356 ரூபாவாக அமையும்.

அதேவேளை 95 ஒக்டேன் பெற்றோலின் விலை 03 ரூபாயினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. புதிய விலை 423 ரூபாய்.

டீசல் விலை 03 ரூபாயினால் அதிகரிக்கப்பட்டு, புதிய விலை 356 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

சுப்பர் டீசலின் விலையும் 10 ரூபாயினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி புதிய விலை 431 ரூபாயாகும்.

மண்ணெண்ணெய் விலையும் 07 ரூபாயினால் அதிகரிக்கப்பட்டு, புதிய விலை 249 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்