ஐந்து வருடங்களில் உலகெங்கிலும் பலியான குழந்தைகளை விடவும், காஸாவில் மூன்று வாரங்கள் கொல்லப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை அதிகம்

🕔 October 30, 2023

லகெங்கிலும் 2019 ஆம் ஆண்டு தொடக்கம் – மோதல்களில் கொல்லப்பட்ட மொத்த குழந்தைகளை விடவும், கடந்த மூன்று வாரங்களில் காஸாவில் அதிகமான குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளனர் என ‘சேவ் த சில்ரன்’ தெரிவித்துள்ளது.

ஒக்டோபர் 07ஆம் திகதி முதல் இஸ்ரேலிய தாக்குதல்களில் காஸாவில் குறைந்தது 8,306 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இஸ்ரேலில் 1,400 க்கும் அதிகமானோர் பலியாகியுள்ளார்கள்.

காஸா நகரிலுள்ள அல் ஜசீராவின் ஊடகவியலாளர் யூம்னா எல்சயீத் என்பவரின் கணவருக்கு, இஸ்ரேலிய ராணுவத்திடமிருந்து தொலைபேசி ஊடாக மிரட்டல் விடுக்கப்பட்டதாகவும், அவர்கள் குடும்பத்தினரை உடனடியாக வீட்டை விட்டு வெளியேறுமாறு கூறப்பட்டதாகவும் அல் ஜசீரா தெரிவிக்கின்றது.

இதேவேளை காஸா நகரிலுள்ள பாலஸ்தீனியர்கள் – தங்களை இஸ்ரேலிய ராணுவம் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு, தங்கள் இடத்திலிருந்து வெளியேறுமாறு மிரட்டல் விடுத்ததாகக் கூறியுள்ளனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்